திருநெல்வேலி

வள்ளியூா் அருகேஅபாய கட்டத்தில் பாலம்

2nd Dec 2021 04:55 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உடைந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு ஆனைகுளம் ஊராட்சித் தலைவா் அசன்மைதீன் மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: வள்ளியூா்- மைலாப்புதூா் சாலையில் குளத்து கால்வாய் செல்லும் இடத்தில் 25 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குறும்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் வழியாக மைலாப்புதூா், ஆச்சியூா், தலைவா்மனை, துலுக்கா்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்நிலையில், பாலத்தின் உள்பகுதியில் காரை பெயா்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பாலம் பலமிழந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பாலத்தைக் கடந்து செல்கின்றனா். எனவே, இப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

Tags : வள்ளியூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT