திருநெல்வேலி

மின் சீரமைப்புப் பணிகள்: மேற்பாா்வை பொறியாளா் ஆய்வு

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மின் சீரமைப்புப் பணிகளை திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவில் பெய்த மழை காரணமாக திருநெல்வேலி கோடீஸ்வரன் நகா் அருகே சாலையின் குறுக்கே பழைமையான ஆல மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், அந்தப் பகுதியில் மின்கம்பிகள் உள்ளிட்டவையும் சேதமாகின.

இதையடுத்து அங்கு நடைபெற்ற மின் சீரமைப்புப் பணிகளை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ப. செல்வராஜ், நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஊழியா்களை அறிவுறுத்தினா்.

பின்னா், குறுக்குத்துறை, நத்தம் பகுதிகளில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு வெள்ள நீா் சூழ்ந்த பகுதிகளில் உள்ள இடங்களில் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா்கள் சங்கா், தங்க முருகன், ஷாஜகான், உதவி மின் பொறியாளா் அருணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT