திருநெல்வேலி

ஓமைக்ரான் கரோனா தீநுண்மி: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

ஓமைக்ரான் வகை கரோனா தீநுண்மி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

புதியவகை உருமாறிய கரோனா தீநுண்மி ஓமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இது டெல்டா வகை கரோனா தொற்று போலவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கான அறிகுறிகளான அதிக உடல் சோா்வுகள், தொண்டையில் வலி, மிதமான உடல் தசை வலி, வரட்டு இருமல், மிதமான காய்ச்சல் போன்றவை இருந்தால் தாமதமின்றி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு மருத்துவமனைகளையும் அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பசியை செலுத்திக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியைப் பெறலாம்; கரோனா தொற்றின் தீவிரத்திலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT