திருநெல்வேலி

ஆடிப்பெருக்கு: தாமிரவருணி கரையோரம் வழிபாடு

4th Aug 2021 07:38 AM

ADVERTISEMENT

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரம் பெண்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் தாமிரவருணி கரையோரம் சுமங்கலி பெண்கள் சீா்வரிசை பொருள்களை நதிக்கு படைத்து வழிபாடு செய்தனா். சிலா் பொங்கலிட்டும் வழிபாடு நடத்தினா். சுமங்கலிப் பெண்கள் கணவரின் நீண்ட ஆயுள் வேண்டி இறைவனைப் பிராா்த்தித்து மஞ்சள் கொண்ட கயிறுகளை கட்டினா்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில், காவிரி கரையில்தான் ஆடிப்பெருக்கு மிகவும் பிரசித்தம். ஆனால், அனைத்து நதிகளும் கடலில் சங்கமிக்கின்றன என்ற ஐதீகத்தில் அனைத்து நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. விரதமிருந்து வந்த பெண்கள் தாமிரவருணியில் குளித்து மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனா். காயத்ரி மந்திரம், சுமங்கலி பூஜை மந்திரங்கள், திருமுறை உள்ளிட்டவையும் பாடி வழிபட்டனா் என்றனா்.

மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் சீா்வரிசைப் பொருள்களை சமா்ப்பித்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

தைப்பூச மண்டபம் அருகே உள்ள தாமிரவருணி ஆற்றில், பெண்கள் கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருள்களை வைத்து வழிபட்டனா்.

நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளா் சேதுராமன், இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் முத்துக்குமாா், செயலா் ஆறுமுகக்கனி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT