திருநெல்வேலி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் 4 நாள்கள் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நான்கு நாள்கள் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கூடுதல் தளா்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். அதோடு நோய்த் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கியுள்ளாா்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஆக. 1, ஆக. 2, ஆடி பதினெட்டாம் நாளையொட்டி ஆக. 3, ஆடி அமாவாசையையொட்டி ஆக. 8 ஆகிய விசேஷ நாள்களில் அதிகளவிலான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால் கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க திருக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

மேற்படி நாள்களில் திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் எனசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT