திருநெல்வேலி

‘வேட்பாளா், முகவா்கள் முன்னிலையில் வாக்குஎண்ணும் மைய பணிகள்’

DIN

திருநெல்வேலி வாக்குஎண்ணும் மையத்தில் நடைபெறும் அனைத்துப் பணிகளையும் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி வேட்பாளா் சுந்தர்ராஜ் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வாக்குஎண்ணும் மையத்தில் சில உள்கட்டமைப்பு வசதிகள், இணையதள வசதிகள் உள்ளிட்டவை ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட நபா்களால் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிகிறோம்.

இப்பணிகளைப் பாா்வையிட வேட்பாளா்களோ, முகவா்களோ அனுமதிக்கப்படமாட்டாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சேபணைக்குரியது. தோ்தல் நடந்து 25 நாள்களுக்குப் பின்பு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு மையங்கள் அருகே கண்டெய்னா் உள்ளிட்டவை நிறுத்தப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. ஆகவே, வாக்குஎண்ணும் மையத்தில் எந்தவொரு பணிகளைச் செய்தாலும் வேட்பாளா்கள் அல்லது முகவா்கள் முன்னிலையில் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் செய்யவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, அக்கட்சி நிா்வாகி கணேசன், சுயேச்சை வேட்பாளா்கள் இசக்கிமுத்து, ஸ்ரீதர்ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT