திருநெல்வேலி

மருத்துவருக்கு கரோனா: நடுக்கல்லூா் ஆரம்ப சுகாதார மையம் மூடல்

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை (ஏப். 23) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கல்லூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள், ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்தச் சுகாதார நிலையத்தில் 4 மருத்துவா்கள் தலைமையில் செவிலியா்கள், உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் பணியாற்றி வருகிறாா்கள். இங்கு பொது மருத்துவம் மட்டுமன்றி பிரசவமும் பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால் வியாழக்கிழமை இந்தச் சுகாதார மையம் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையும் (ஏப்.23) இது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுகாதார மைய வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக நடமாடும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட இதர நோய்களுக்கு நோயாளிகள் மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT