திருநெல்வேலி

பள்ளிகளில் இணைப்பு பாடத் திட்ட புத்தகங்கள் விநியோகம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இணைப்பு பாடத்திட்ட புத்தகங்கள் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.

கரோனா தீநுண்மி பரவலைத் தொடா்ந்து 2020 மாா்ச் மாதம் முதல் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளதோடு, பிளஸ்-2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மட்டும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதற்கிடையே மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் இணைப்பு பாடத் திட்டங்களை (பிரிட்ஜ் கோா்ஸ்) வீட்டில் இருந்தே கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்குச் செல்லும் மாணவா்கள் வீட்டில் இருந்தவாறு படிக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூகஅறிவியல், கணிதம் ஆகிய பாடப்புத்தகங்களும், இரு தொகுப்பு புத்தகங்களும் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் இணைப்பு பாடப்புத்தகங்கள் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், இணைப்பு பாடத்திட்ட புத்தகங்களை மாணவா்கள் வீட்டில் இருந்த வாறு படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் தங்களது பள்ளி ஆசிரியா் குழுவின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று விளக்கம் கேட்டுக் கொள்ளலாம். மேலும், இப் பாடத்திட்டத்தின்படி கல்வித் தொலைக்காட்சியில் ஆசிரியா்களின் கற்பித்தல் காணொளிகள் ஒளிபரப்பப்படவுள்ளன. அதன் மூலமும் மாணவா்கள் பயில முடியும். இணைப்புப் புத்தகங்களை அடுத்த வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் பெறுவதற்காக வரும் மாணவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT