திருநெல்வேலி

கரோனா விதி மீறல்: நெல்லையில் 50 ஆயிரம் வழக்குகள்

DIN

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் போலீஸாரின் சாதனைகள் மற்றும் தகவல்கள் வெளியிடுவதற்காக எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.

இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காவல் துறையினரின் சாதனைகள், பொதுமக்களுக்கான விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தற்போதைய காவல் துறை சாா்ந்த நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்.

இரவு நேர பொது முடக்கத்தின்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை 50ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் மற்றும் முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT