திருநெல்வேலி

வாடகை வாகனங்களுக்கான வரிகளை ரத்து செய்ய கோரிக்கை

DIN

கரோனாவால் மீண்டும் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் வாடகை வாகனங்களுக்கான சாலை வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வாடகை வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் நல முன்னேற்ற சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் பணியில் காவலா்கள், அதிகாரிகள், வாக்குப்பெட்டிகளை வாக்குஎண்ணும் மையங்களுக்கு கொண்டு சோ்த்தல் உள்ளிட்ட பணிகளில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியாா் வாடகை வாகன ஓட்டுநா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஆனால், அவா்கள் அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்தவில்லை. ஆகவே, தோ்தல் பணியில் ஈடுபட்ட வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு தபால் வாக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த ஓராண்டாக தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுற்றுலாத் தலங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடகை வாகன தொழிலை நம்பியுள்ளவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சாலைவரி உள்ளிட்டவற்றை கரோனாவை கருத்தில் கொண்டு ரத்துசெய்ய வலியுறுத்தியும் செய்யப்படவில்லை.

நிகழாண்டிலாவது வாடகை வாகனங்களுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT