திருநெல்வேலி

நெல்லை அருகே தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு

7th Apr 2021 07:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே பேட்டையில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகா் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படை வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் அப்பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக 4 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பேட்டை அருகே உள்ள குன்னத்தூா் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்காக டோக்கன் கொடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதைப்போன்று திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT