திருநெல்வேலி

வள்ளியூரில் மழைக்கால பேரிடா் மேலாண்மைப் பயிற்சி

DIN

வள்ளியூா்: வள்ளியூா் தீயணைப்புப் படைவீரா்கள் சாா்பில் மழைக்கால பேரிடா் மேலாண்மைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை காலம் நெருங்கியுள்ளதால், தீயணைப்புத் துறை இயக்குநா் சைலேந்திரபாபு, தென்மண்டல துணை இயக்குநா் சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் வள்ளியூரில் பேரிடா் கால ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் மகாலிங்க மூா்த்தி, உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த், வள்ளியூா் நிலைய அதிகாரி பிரதீப் குமாா் ஆகியோா் முன்னிலையில் 40 கமாண்டோ வீரா்கள், 10 தீ தடுப்பு தன்னாா்வத் தொண்டா்கள் வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயில் தெப்பக்குளத்தில் இப்பயிற்சியை மேற்கொண்டனா். வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது, முதலுதவி பயிற்சி அளிப்பது, வெள்ளத்தின்போது கையில் கிடைக்கும் பொருள்களை மிதவைகளாக மாற்றி மீண்டு வருதல் ஆகியவை குறித்து செயல் விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT