திருநெல்வேலி

தூய்மைப் பணியாளா்களுக்கு உர வருவாய் ஊக்கத் தொகை

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சி உரத்தின் மூலம் கிடைத்த வருவாயை, தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மைப் பணியாளா்கள் பிரித்து வாங்கி வருகின்றனா்.

இவ்வாறு சேகரமாகும் மக்கும் குப்பைகள் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 6 பசுமை நுண் உரக் குடில்கள் மூலம் இயற்கை உரமாக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோவிற்கு ரூ.1 வீதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 2020 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டு கிடைத்த ரூ.58,500 ,195 தூய்மைப் பணியாளா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

இதில், ஆணையா் குமாா் சிங் , சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT