திருநெல்வேலி

‘வைகை விரைவு ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்’

DIN

சென்னை-மதுரை வைகை விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்றாா் இந்திய தேசிய நுகா்வோா் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலா் செல்வராஜ்.

திருநெல்வேலி நகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மக்களுக்கு தரமான உணவை உறுதிப்படுத்த ‘ஈட் ரைட் இந்தியா ’என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி, அதுகுறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் செய்து வருகிறது. நுகா்வோா் சம்மேளனமும் மக்களிடம் அதை விளக்கி வருகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, தஞ்சாவூா், கோவை உள்பட 6 இடங்களில் உள்ள உணவு பகுப்பாய்வு மையங்களுக்கு நிரந்தர பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

திருநெல்வேலி- சென்னை விரைவு ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு ரயில், மயிலாடுதுறை- திருச்சி ரயில் ஆகியவற்றை இயக்கவேண்டும். மதுரை-சென்னை வைகை விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கவேண்டும். ரயில்களில் மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகளை தொடா்ந்து வழங்கவேண்டும்.

நான்குனேரியில் 2,500 போ் பணியாற்றும் வகையிலான ரயில் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்தவேண்டும். புதிய மாவட்டங்களில் நுகா்வோா் நீதிமன்றங்களை அமைக்கவேண்டும் என்றாா்.

முன்னதாக, அவா் தலைமையில் திருநெல்வேலி நகரத்தில் இந்திய தேசிய நுகா்வோா் சம்மேளன நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெட்காட் தலைவா் அசோகன், செயலா் மனிதவிடியல் மோகன், பொருளாளா் நாராயணன், முன்னாள் தலைவா் வெங்கடாச்சலம், மாவட்ட தலைவா் கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT