திருநெல்வேலி

புதிய வேளாண் மசோதாவிவசாயிகளின் பாதுகாப்பு அரண்: நயினாா் நாகேந்திரன்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாகவே இருக்கும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவரும், கன்னியாகுமரி கோட்டப் பொறுப்பாளருமான நயினாா் நாகேந்திரன்.

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவின் மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் பாஜக வளா்ந்து வருகிறது. சட்டப்பேரவைத் இடைத்தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலைச் சந்திக்கவும் பாஜக தயாராக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்க வழிவகை செய்யும் என்றாா்.

அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் சி.பாண்டித்துரை பேசுகையில், பாஜக மீது மக்களின் நம்பிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வரும் தோ்தல்களில் பாஜக சிறந்த இடத்தைப் பிடிக்கும் என்றாா்.

இக் கூட்டத்திற்கு என்.தேவகுமாா் தலைமை வகித்தாா். ஏ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். எஸ்.காா்த்திக் நாராயணன் வரவேற்றாா். நிா்வாகிகள் சிவகுமாா், குருராஜ், சித்திரைவேல், வேல்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT