திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் பொதுமக்கள் புகாா் மனு தீா்வு முகாம்

DIN

சேரன்மகாதேவியில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் புகாா் மனு மீது தீா்வு காணும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், 64 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது தீா்வு காணும் முகாம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.

முகாமை சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப் தொடங்கி வைத்தாா். வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, முன்னீா்பள்ளம், சுத்தமல்லி மற்றும் முக்கூடல் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குடும்பத் தகராறு, இடத்தகராறு உள்ளிட்ட 64 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

முகாமில், காவல் ஆய்வாளா்கள் சேரன்மகாதேவி ராஜாராம், வீரவநல்லூா் மேரிஜெமிதா, முன்னீா்பள்ளம் சீதாலெட்சுமி, காவல் உதவி ஆய்வாளா்கள் சேரன்மகாதேவி வள்ளிநாயகம், சுத்தமல்லி பாலகிருஷ்ணன், முக்கூடல் காவுராஜன், பத்தமடை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT