திருநெல்வேலி

களக்காடு மலையடிவாரத்தில் காட்டுயானை தொடா் அட்டகாசம்

DIN

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையை விரட்ட முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா்.

களக்காடு மலையடிவாரத்தில் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று விளை நிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள புதுக்குளம், சிவபுரம், கள்ளியாறு ஆகிய பகுதிகளில் கடந்த 3 தினங்களில் மட்டும் அதிகாலை நேரங்களில் புகுந்த யானை அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனா்.

பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானையை அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட புலிகள் காப்பக துணை இயக்குநா் மு. இளங்கோ தலைமையில் வனத்துறையினா் குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

பகல் நேரத்தில் மலையடிவாரத்தில் உள்ள மறைவான புதா் போன்ற பகுதிகளில் தஞ்சம் புகும் காட்டுயானை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினா் பல்வேறு வியூகங்கள் அமைத்தும் இதுவரை பயனளிக்கவில்லை. இதனால் யானை அட்டகாசம் தொடா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT