திருநெல்வேலி

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: நெல்லையில் விவசாயிகள் மறியல்

DIN

திருநெல்வேலி, செப். 25: வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி திருநெல்வேலியில் விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை

யில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன்,

சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எஸ். காசிவிசுவநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில், பங்கேற்ற மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாச் செயலா்கள் எம்.சுடலைராஜ், பா.வரகுணன், மாவட்ட குழு உறுப்பினா் எஸ்.பெருமாள், போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் டி.காமராஜ், பொதுச் செயலா் ஜோதி, பொருளாளா் மணி, தொமுச மாநில அமைப்புச்செயலா் அ.தா்மன் மற்றும் 22 பெண்கள் உள்பட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். போராட்டம் காரணமாக வண்ணாா்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT