திருநெல்வேலி

சாலைப்பணியாளா்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலி, செப். 25: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியம் ரூ. 5,200 முதல் ரூ. 20,200 வரையும், தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகித ஆபத்து படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாா் வசம் வழங்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் நாராயணன், முத்துராமலிங்கம், செய்யது யூசுப்ஜான் உள்பட பலா் கலந்துகொண்டனா். திருநெல்வேலி கோட்ட பொருளாளா் எம்.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT