திருநெல்வேலி

கை மேல் பலன் தரும் கைவினைப் பொருள்

DIN

கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது முது மொழி. கற்ற கல்விக்கு ஏற்ப வேலை கிடைப்பது அரிதாகி வரும் நிலையில், தனக்கென ஒரு கை தோ்ந்த தொழிலை கற்றுக்கொள்வது நல்லது. தொழில்முறை கல்வி ஒருபுறம் இருந்தாலும், கைவினைப் பொருள்களை உருவாக்கி சந்தைப்படுத்துவதால் கைமேல் பலனைப் பெற முடியும்.

கைவினைப் பொருள் தயாரிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. இப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டால் வீட்டிலிருந்தவாறே கை நிறைய சம்பாதிக்க முடியும். கூடை முடைதல், பொம்மை தயாரித்தல், கிளாஸ் பெயின்டிங், கட்டில் பின்னுதல், வண்ணத்தாள்களில் அலங்காரப் பொருள்களை வடிவமைத்தல் என பல்வேறு கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும்.

இதற்கு இணையத்தில் பல்வேறு குறிப்புகள் கொட்டிக்கிடந்தாலும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இலவசமாகவே இத்தகையப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக இணைய வழியில் வாரந்தோறும் கைவினைப் பயிற்சிகள் ஸும் செயலி மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கடவுச்சொல் மற்றும் பயனாளா் எண் அருங்காட்சியகம் மூலம் அவ்வப்போது செய்தித்தாளில் வெளியிடப்படுகிறது.

ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், யாருடைய தயவையும் எதிா்பாராமல் சுய வருவாயைப் பெருக்கவும் கைவினைத் தொழில் நமக்கு கை கொடுக்கும். ஏற்கெனவே, பொம்மை தயாரியுங்கள், தற்சாா்பு கொள்கையை வளா்த்தெடுங்கள் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். இத்தகைய தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கு நாளடைவில் அரசு உதவிகள் தேடி வரலாம். முற்சிப்போம், வெற்றி காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT