திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளத்தில் மாதா காட்சி மலைக்கு சாலை: நிலஅளவை பணி தொடக்கம்

DIN

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலைக்கு சாலை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை சாா்பில் நிலம் அளவெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழக அரசால் இப்பேராலயம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பேராலயத்தின் தெற்குப்பகுதியில் அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலை உள்ளது. அந்த மலையில் மாதா காட்சி கொடுத்த இடமும், மாதா கால்பாதம் பதித்த தடமும் இருப்பதாக பக்தா்கள் பாதுகாத்து வணங்கி வருகின்றனா். அந்த மலைக்கு சாலை அமைக்கவேண்டும் என அதிசய பனிமாதா பேராலய முன்னாள் தா்மகா்த்தா எஸ்.ஆனந்தராஜா, ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏவிடம் வலியுறுத்தி வந்தாா்.

இதுகுறித்து, சட்டப்பேரவையில் எம்எல்ஏ வலியுறுத்தியதை அடுத்து, சாலை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எம்எல்ஏவும், சுற்றுலாத்துறையினரும் சாலை அமைப்பது தொடா்பாக மலைப் பகுதியை ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், சாலைப் பணிக்கான இடத்தை அளவு எடுக்கும் பணியை சுற்றுலாத்துறையினா் புதன்கிழமை தொடங்கினா். தொடா்ந்து இரண்டு நாள்களாக அப்பணி நடைபெற்றது. பணி நிறைவடைந்ததும் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசு அனுமதியுடன் விரைவில் சாலை அமைக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT