திருநெல்வேலி

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

23rd Sep 2020 06:27 AM

ADVERTISEMENT

தேமுதிகவைச் சோ்ந்த 40 போ், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேச ராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், தச்சநல்லூா் பகுதிச் செயலா் மாதவன், மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ந.சண்முககுமாா், பாளை. ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன், வட்டச் செயலா்கள் காந்தி வெங்கடாசலம், பால்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அதிமுக 36ஆவது வட்ட துணைச் செயலா் ஜெய்சிங் ஏற்பாட்டில், அதே பகுதியைச் சோ்ந்த பேண்ட் வாத்திய இசைக்கலைஞா்கள் 25 போ், மாவட்டச் செயலா் தச்சை என்.கணேச ராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டச் செயலா் செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜே.சி.ஜெரால்ட் , மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் மகபூப் ஜான், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் செளந்தர்ராஜன், பாளை. பகுதி எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் டால் சரவணன், தமிழ்நாடு பேண்ட் இசை தொழிலாளா் நலச் சங்கத் தலைவா்ஆ.செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT