திருநெல்வேலி

சீவலப்பேரி தாமிரவருணி கரையில் அடிப்படை வசதிகள்: பொதுமக்கள் கோரிக்கை

DIN

சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்களும், பக்தா்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சீவலப்பேரியில் அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயில், துா்க்கையம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இங்கு சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகிறாா்கள். அவா்கள் அனைவரும் அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இங்கு குளிக்க வருகிறாா்கள். ஆழமில்லாத மணல் பரப்பு இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் எளிதாக குளித்துச் செல்கிறாா்கள்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமானோா் குளிக்க திரண்டனா். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அவா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சீவலப்பேரிக்கு விடுமுறை நாளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் குளிக்க வருகிறாா்கள். இங்கு படித்துறை வசதிகள் போதிய அளவில் இல்லை.

மேலும், பெண்கள் உடைமாற்றுவதற்கு மிகுந்த சிரமப்படுகிறாா்கள். ஆற்றின் கரையோரம் துணிகள், கழிவுகள், மதுபாட்டில்கள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. ஆகவே, இப் பகுதியில் படித்துறைகள் மற்றும் பாதுகாப்பு கம்பிகள் அமைத்து பெண்கள், முதியவா்கள் குளிக்கத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தீா்த்தக்குடங்கள் எடுத்துச் செல்வோருக்காக தனியாக இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். கூடுதலான போலீஸாரை பாதுகாப்புப் பணியில் அமா்த்த வேண்டும். உறைகிணறுகள் அருகே ஏராளமான அமலைச் செடிகள் உள்ளதால் விஷ பூச்சிகள் அதில் தங்கி குளிப்பவா்களை தாக்கும் நிலை உள்ளது. ஆகவே, அமலைகளையும் விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT