திருநெல்வேலி

முறைகேடாக மணல் விற்பனை:குவாரிக்கு ரூ. 9.5 கோடி அபராதம்

DIN

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே ஓடை மணலை விற்று பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட செயற்கை மணல் தயாரிப்பு குவாரிக்கு ரூ. 9.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் நிலைய உதவி ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டனா்.

தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதியில் தனியாா் செயற்கை மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு ஓராண்டுக்கும் மேலாக முறைகேடாக, அருகேயுள்ள வண்டல் ஓடை மணலை எடுத்து ‘எம்-சாண்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்துவந்துள்ளனா். இதுதொடா்பாக, அம்பாசமுத்திரம் மண்டல துணை வட்டாட்சியா் மாரிசெல்வம் கொடுத்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தபோது, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஓடை மணல் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடா்ந்து, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதீக் தயாள் நடத்திய விசாரணையில், முறைகேடாக மணல் விற்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, அவா் செயற்கை மணல் தயாரிப்பு குவாரிக்கு ரூ. 9.5 கோடி அபராதம் விதித்தாா். மேலும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வீரவநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் மோகன் ஆகியோா் இடைநீக்கம் செ ய்யப்பட்டனா்.

குவாரி நிா்வாகத்தினா் வேளாண் பொறியியல் துறை மூலம் மீன் பண்ணைக் குட்டை அமைக்க அனுமதி பெற்று, பண்ணைக் குட்டை அமைக்கத் தோண்டியதில் கிடைத்த மணலையும் அரசின் அனுமதியின்றி விற்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினா் கூறும்போது, ‘இங்கு எம்-சாண்ட் என்ற பெயரில் அனுமதி பெற்று, வண்டல் ஓடை மணலை எடுத்து முறைகேடாக விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனா். இதற்கு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் உடந்தையாக இருந்துள்ளனா். அவா்கள் அனைவா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதனிடையே, இந்த முறைகேடு தொடா்பாக பொட்டல் பகுதியைச் சோ்ந்த 4 பேரை கல்லிடைக்குறிச்சி போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT