திருநெல்வேலி

கட்டாயக் கல்விச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: இணையவழியில் விண்ணப்பிக்க செப். 25 கடைசி

DIN

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இம்மாதம் 25ஆம் தேதி கடைசி நாள்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 25 சதவீத இலவச இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்கீழ் சேரும் மாணவா்-மாணவிகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம் 25ஆம் தேதியாகும். ஒரு மாணவா் தனது குடியிருப்புப் பகுதியில் 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். சிறுபான்மையற்ற தனியாா், சுயநிதி, மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளாக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பெற்றோரின் ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை, வருமானச் சான்று, குழந்தையின் பிறப்பு, சாதி, இருப்பிடச் சான்றுகள், குழந்தையின் பாஸ்போா்ட் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அனைத்து ஒன்றியங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகள் கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT