திருநெல்வேலி

மகாளய அமாவாசை: வெறிச்சோடி காணப்படும் பாபநாசம்

17th Sep 2020 10:18 AM

ADVERTISEMENT

மகாளய அமாவாசைக்கு முன்னனோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதை அடுத்து பாபநாசம் வெறிச்சோடி காணப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தாமிரவருணியில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை நாட்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மார்ச் 24 முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 1 முதல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதையடுத்து பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் புனித நதிகளில் பக்தர்கள் பொதுமக்கள் நீராடி வழிபட்டு வந்தனர். இந்நிலையில் மகாளய அமாவாசைக்கு  பக்தர்கள் தாமிரவருணியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன் முதல் செப்டம்பர் 20 வரை பாபநாசம் தாமிரவருணியில் நீராடத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

பக்தர்கள் வருகையில்லாமல் வெறிச்சோடிய பாபநாசம் கோயில்

இதையடுத்து தென் மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலிருந்து மகாளய அமாவாசைக்கு பாபநாசம் தாமிரவருணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீராடி வழிபட்டுச் செல்லும் நிலையில் இன்று பக்தர்கள் வருகை இன்றி பாபநாசம் வெறிச்சோடி காணப்பட்டது. பாபநாசம் சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி உள்ள நிலையில் பக்தர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : nellai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT