திருநெல்வேலி

சங்கரநாராயணசுவாமி கோவிலில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்

1st Sep 2020 06:48 PM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமித் திருக்கோயில் செவ்வாய்கிழமை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் பரிசோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் அதிகாலையில் திறக்கப்பட்டது.அதற்கு முன்பாகவே பக்தர்கள் கோவில் முன் மண்டபத்தில் காத்திருந்தனர்.கோவில் கதவுக்குப் பின்னால் சூடம் ஏற்றப்பட்டு அதன் பிறகு திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகு சன்னதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

சுமார் 5 மாதங்கள் கழித்து கோவிலுக்குள் பக்தர்கள் சென்றதால் பக்திப் பரவசத்துடன் சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள், சங்கரநாராயணரைத் தரிசித்தனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT