திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் & காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

அருள்மிகு நெல்லையப்பர் & காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக ஆனி, ஆவணித் திருவிழாக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிய முறையில் நடைபெற்றன.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவை சுவாமி அம்பாள் திருவீதி உலாவுடன் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள், அரசியல் கட்சியினர் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இது தொடர்பாக கோயில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், உள் பிரகாரங்களில் வீதி உலா நடைபெற்று, திருக்கல்யாணம் நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சனிக்கிழமை(அக்.31) தொடங்கியது. இதில், பந்தல்கால் நாட்டும் வைபவமும், திருக்கொடியேற்றமும் அம்மன் சந்நிதியில் வைத்து நடைபெற்றது.

மேலும், வரும் நவ.14ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை மற்றும் திருக்கோயில் வளாகத்திற்குள் வைத்து நடைபெற உள்ள சுவாமி & அம்பாள் புறப்பாடு ஆகியவற்றையும், அம்மன் தபசுக்காட்சி, திருக்கல்யாணக் காட்சி ஆகியவற்றையும் இத்திருக்கோயிலின் அலுவல்சார் யூடியூப் தளமான kanthimathi nellaiapparல் தினமும் நேரலையில் காணலாம் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT