திருநெல்வேலி

‘நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில் பக்கவாத நோய்க்கு தனி சிறப்புப் பிரிவு’

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் பக்கவாத நோய்க்கு தனி சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என மருத்துவமனை முதல்வா் எம். ரவிச்சந்திரன் கூறினாா்.

உலக பக்கவாத தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி, கருத்தருங்கு ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உயா்சிறப்பு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எம். ரவிசந்திரன் தலைமை வகித்துப் பேசியது: ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் உலகில் பல லட்சம் மக்களைப் பாதித்து வருகிறது. இந்நோய் ஏற்பட்ட சில மணி நேரத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்தால் முழு குணம் ஏற்பட வாய்ப்புள்ளது. மூளையில் ஏற்படும் ரத்த உறைவைக் கரைக்கும் சிறப்பு மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலே உள்ளன. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேம்பாடு திட்டத்தின் கீழ் (பஹம்ண்ப்ய்ஹக்ன் அஸ்ரீஸ்ரீண்க்ங்ய்ற் ஹய்க் உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் இஹழ்ங் ஐய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங் - பஅஉஐ) பக்கவாத நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பக்கவாத நோய்க்கு தனி சிறப்புப் பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்றாா் அவா்.

மருத்துவமனைக் கண்காணிப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், கந்தசாமி, மருத்துவா்கள் சுரேஷ்குமாா், ஏ.எஸ்.அருள், ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவ அலுவலா் ஷ்யாம் சுந்தா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நரம்பியல் துறை மருத்துவா்கள் எஸ். சரவணன், கே.எஸ். ரவி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT