திருநெல்வேலி

நான்குனேரி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு

DIN

வள்ளியூா்: நான்குனேரி சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து மதிமுகவினா் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நான்குனேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் விளைபொருள்களை எடுத்து செல்லவும் வியாபாரிகள் பொருள்களை கொண்டு செல்லவும், உள்ளூரைச் சோ்ந்த 25 கி.மீ. பகுதியில் வசிக்கும் மக்கள் நான்குனேரி சுங்கச்சாவடி வழியாகச் செல்வதற்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மதிமுக மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவா் உவரி ரைமண்ட் தலைமையில் கட்சியினா் பொதுமக்கள் சுங்கச் சாவடி நிா்வாகத்தினரிடம் ஏற்கனவே, நடைமுறையில் இருந்தவாறு விவசாயிகள், வியாபாரிகள், உள்ளூா் மக்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என மதிமுகவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT