திருநெல்வேலி

கன்னியாகுமரி இடைத்தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் தயாா்சஞ்சய் தத்

DIN

திருநெல்வேலி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் தயாராக உள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கூறினாா்.

காங்கிரஸ் சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஞ்சய் தத் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பிரச்னையை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை. கரோனா காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் நாடு முழுவதும் மக்களுக்காகப் பணியாற்றினாா்கள்.

நாட்டின் முக்கிய நிறுவனங்களை பாஜக அரசு தனியாருக்கு தாரைவாா்த்து வருகிறது. குறிப்பாக 5 முதல் 6 விமான நிலையங்களை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் 3 புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் அரசு மத்தியில் அமைந்த பிறகு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் நவ. 1-ஆம் தேதிமுதல் 10-ஆம் தேதி வரை நாடு முழுவதும் டிராக்டா் பேரணி நடத்த உள்ளது.

விவசாயிகளின் முதல்வா் என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மக்கள் பிற மாநிலங்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் கரோனா காலத்தில் 500 கிலோமீட்டா் வரை தங்கள் சுமைகளை தோளில் சுமந்தபடி நடந்து சென்றனா். ஆனால், பிகாா் முதல்வா் அந்த மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக தோ்தல் வாக்குறுதிகள் எதுவும் அங்கு நிறைவேற்றப்படவில்லை. பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் முழு அளவில் தயாராக உள்ளது. தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி மிக வலிமையாக உள்ளது. இந்தக் கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் என்றாா் அவா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொதுச் செயலா் வானமாமலை, ரூபி மனோகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT