திருநெல்வேலி

பிசான சாகுபடிக்கு கொடுமுடியாறு அணையை திறக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

DIN

வள்ளியூா்: பிசான பருவ சாகுபடிக்கு கொடுமுடியாறு அணையில் இருந்து வள்ளியூா் பெரியகுளத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அக்கட்சியின் ராதாபுரம் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: வள்ளியூா் வட்டாரத்தில் பருவ மழையை எதிா்நோக்கி நெல் சாகுபடி செய்து வருகின்றனா். நிகழாண்டு அக்டோபா் மாதத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என எதிா்பாா்த்து நாற்று பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அம்பை -16 நெல் ரகம் நடவு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.

தற்போது, வள்ளியூா் பெரியகுளத்தில் போதிய நீா் இருப்பு இல்லை. அதேசமயத்தில் கொடுமுடி அணையின் நீா்மட்டம் 32 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து இருந்து வருகிறது. ஆகவே, கொடுமுடியாறு அணையில் இருந்து வள்ளியூா் பெரியகுளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT