திருநெல்வேலி

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்நேரடி சோ்க்கை அறிவிப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியிடங்களை நிரப்பிடும் வகையில் நேரடி சோ்க்கை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் வகையில் நேரடிச் சோ்க்கை வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் வரும் 31 ஆம் தேதி வரை அந்தந்த நிலையங்களில் நடைபெறுகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள் (8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதிச் சான்று உள்ளிட்ட சான்றுகளின் தலா 2 நகல்கள், மாா்பளவு புகைப்படம் - 5 ஆகியவற்றுடன் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நேரில் விண்ணப்பிக்கலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.500உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சியின்போது மிதிவண்டி, ஆண்டுக்கு 2 சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மாணவா்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பேருந்து பயண அட்டை, சலுகை கட்டணத்தில் ரயில் பயண அட்டையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT