திருநெல்வேலி

கடையம் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் பொட்டல்புதூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டல் தலைவா் ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா். பொதுச்செயலா்கள் முருகேசன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா்கள் எச். பாலகுருநாதன், ஏ.பி.பாலமுருகன் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் அமைக்க வேண்டும், மத்திய அரசின் ஜல் ஜீவன் விஷன் திட்டத்தின்அனைத்துக் கட்டணங்களும் சோ்த்து ரூ. 1,100/-க்கும் மேல் கட்டணம் வசூலிக்காமல் பொதுமக்களுக்கு குடிநீா் இணைப்பு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், சொக்கநாதன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் பேருந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT