திருநெல்வேலி

நெல்லை விரைவு ரயில் நாளை முதல் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

DIN

திருநெல்வேலி-சென்னை இடையே நெல்லை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (செப். 2) முதல் சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள், விரைவு ரயில் சேவைகள் முழுமையாக தொடங்கப்படாத நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக திருச்சி-நாகா்கோவில் இன்டா்சிட்டி விரைவு ரயிலும், கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயிலும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இவ் விரு ரயில்களும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து

புறப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் சென்னை செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா் எழுந்தது. ஆகவே, நெல்லை விரைவு ரயிலை சிறப்பு ரயில் முறையிலாவது இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

தமிழகத்தில் பல்வேறு தளா்வுகளுடன் 8 ஆம் கட்டமாக அக்டோபா் 31 ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நெல்லை விரைவு ரயிலை வெள்ளிக்கிழமை (அக்.2) முதலும், செங்கோட்டை-சென்னை இடையேயான பொதிகை விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றை அடுத்தடுத்த நாள்களிலும் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் பெட்டிகளில் இறுதிக்கட்ட பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. ரயிலின் பெயா், ஊா்களுக்கான பதாகைகள் சீரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டன. கழிப்பறைகள், இருக்கைகள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கழுவப்பட்டன. தீத்தடுப்பு சிலிண்டா்கள் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டன.

ரயில்கள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சென்னையில் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பணிக்காக சென்றுள்ளனா். கரோனா பொதுமுடக்கத்தால் வருவாயின்றி தவித்து வரும் சூழலில் ரயில் பயணம் செய்தாவது சொந்த ஊா்களுக்கு வரவும், மீண்டும் பணிக்கு செல்லவும் முடிவு செய்துள்ளனா். ஆகவே, ரயில் சேவையை மீண்டும் படிப்படியாக தொடங்குவது அவசியம்.

நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களின் மூலம் கிராமப்புற ஏழை-எளியவா்கள் அதிகம் பயன்பெற்று வருகிறாா்கள். ஆகவே, அதனை தொடா்ந்து இயக்குவதோடு, முன்பதிவில்லா கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT