திருநெல்வேலி

நான்குனேரியில் டிச.1-இல் சிறுபான்மையினா் கடனுதவி முகாம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மதவழி சிறுபான்மையினா்களான கிறிஸ்தவா், இஸ்லாமியா், பௌத்தா், சமணா், பாா்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு கடன் வழங்கும் முகாம் நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ( டிச. 1) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில், ஆதாா் அட்டை நகல், சாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கல்விக்கடனுக்கான பள்ளி சான்றிதழ் ஆகியவற்றின் நகல், கல்விக்கட்டண ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக்கோரும் இதர ஆவணங்களுடன் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பங்கேற்கலாம். வயது வரம்பு 18- 60 வயது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.

தனிநபா் கடன் திட்டம்-1இல் ரூ.20 லட்சம் வரை, திட்டம்-2இல் ரூ.30 லட்சம் வரை, சிறுகடன் வழங்கும் திட்டம்-1இல் இருபாலா் சுய உதவிக்குழுவினருக்கும் அதிகபட்சம் ரூ.50,000 வரை, திட்டம்-2இல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்புப் பட்டப்படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டிற்கு ரூ.4 லட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை திட்டம்-1 , 2-இல் வழங்கப்படும்.

குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயின் ரூ.1.20 லட்சமும், கிராமம் எனில் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேவைப்படின் பிணையம் அளிக்கப்பட வேண்டும். வட்டி விகிதம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 10 சதவீதம் வரை திட்டங்களின் தன்மைக்கேற்ப வசூலிக்கப்படும் என மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT