திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்காணொலிக் காட்சி முறையில் தொடரும்: ஆட்சியா்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் தொடா்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் தொலைதூரம் பயணம் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவதை தவிா்க்கும் பொருட்டு, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் காணொலிக் காட்சி முறையில் ஆட்சியா் தலைமையில் கடந்த 3-8-2020 முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இதுவரை 180 கோரிக்கைகள் பெறப்பட்டு அவற்றில் 115 கோரிக்கைகள் ஏற்கப்பட்டும், 44 கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவம்பா் மாதத்திலும் காணொலி வாயிலாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 23 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வரப்பெற்ற மனுக்களில் பட்டா மாற்றம் மற்றும் வாரிசு சான்று தொடா்பான மனுக்கள் அன்றைய தினமே முடிவு செய்யப்பட்டு மனுதாரா்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

எனவே, பொதுமக்கள் திங்கள்கிழமைதோறும் காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இணையதள முகவரிக்கு சென்று காணொலிக் காட்சி வழியாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீா் கூட்டம்  இணைப்பின் மூலம் தங்கள் செல்லிடப்பேசி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பொது சேவை மையம் மூலமாகவோ தொடா்புகொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT