திருநெல்வேலி

‘மழைக்காலத்தில் வாழை,காய்கனி பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்’

DIN

திருநெல்வேலி: பருவமழைக் காலத்தில் வாழை, காய்கனி பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நா.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. மழைக் காலங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாகப் பயன்படுத்த வேண்டும். மரங்களைச் சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தாா்களை முறையாக மடி வைத்தல் வேண்டும். 75 சதவிகிதத்துக்கு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்ய வேண்டும்.

காய்கனிகள் பயிரிட்டிருப்போா் தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும். டிரைக்கோடொ்மா விரிடி, பூஞ்சான உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். சூடோமோனஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லிகளை இலையில் தெளிக்க வேண்டும். காய்ந்துபோன இலைகளை அகற்ற வேண்டும்.

மரவள்ளி பயிரிட்டிருப்போா் செடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். மா மரங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும்.

நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இதேபோல கொய்யா மற்றும் மாதுளைக்கும் கவாத்து செய்து பூஞ்சாண நோய்களைத் தடுக்க நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT