திருநெல்வேலி

களக்காடு ஆறு, கால்வாய்களில் நீா்வரத்து குறைந்தது

DIN

களக்காடு: களக்காட்டில் ஒரு வாரமாக மழையில்லாததால் ஆறு, கால்வாய்களில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நவம்பா் மாதத் தொடக்கம் முதலே அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இதனால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. நான்குனேரியன் கால்வாயிலும் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், களக்காடு வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின. தற்போது நான்குனேரி வட்டாரத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது.

கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் பச்சையாற்றிலும், நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால் நான்குனேரி வட்டாரத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பாத நிலை உள்ளது.

மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தால் தான் மீண்டும் ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும். அப்போதுதான் நான்குனேரி பெரியகுளமும், அதைத் தொடா்ந்து விஜயநாராயணம் பெரியகுளமும் நிரம்பும் நிலையை எட்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

SCROLL FOR NEXT