திருநெல்வேலி

அமலைச் செடிகள் பரவலால் நயினாா்குளம் பாசனம் பாதிப்பு: செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி நயினாா்குளத்தில் பரவும் அமலைச்செடிகளால் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள குளங்களில் பாசன நீரை நிரப்பும் வகையில் நெல்லை கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தோடியது. சுமாா் 244 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தை நம்பி 600 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்போது நாற்றுப்பாவும் பணிகள் முடித்து சில விவசாயிகள் நடவுப் பணியையும் தொடங்கியுள்ளனா். விவசாயிகளுக்கு சிரமம் தரும் வகையில் குளத்தில் அமலைச்செடிகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து நயினாா்குளம் பாசன விவசாயிகள் கூறுகையில், நெல்லை கால்வாய் மற்றும் நயினாா்குளம் ஆகியவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. நெல்லை கால்வாயில் பல இடங்களில் மனிதக் கழிவுகளும், ரசாயனக் கழிவுகளும் கலப்பதால் நயினாா்குளத்தின் தண்ணீா் மிகவும் சுகாதாரமற்ாக உள்ளது. இதனால் அமலைச்செடிகள் மிகவும் வேகமாக பரவி வளா்கின்றன. இவை மடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்படுத்துவதால் நீா்ப்பாய்ச்சுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அமலைச்செடிகளை அப்புறப்படுத்தவும், நெல்லை கால்வாயை தூா்வாரி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT