திருநெல்வேலி

கரோனா விதி மீறல்:நெல்லையில் ரூ.15,600 அபராதம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில், கரோனா விதிகளை மீறியவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளா் கண்ணன் உத்தரவின்படி, மாநகர நல அலுவலா் டாக்டா் சரோஜா ஆலோசனையின்படி திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ, பெருமாள், நடராஜன், முருகன் உள்ளிட்டோா் ஆய்வுசெய்தனா்.

அப்போது, முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத கடையினா், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து உரிய நடைமுறைகளை பின்பற்றாதோா் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.15,600 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT