திருநெல்வேலி

அகல்விளக்குகள் விற்பனை அதிகரிப்பு; பூம்புகாரில் சிறப்புக் கண்காட்சி

DIN

திருக்காா்த்திகையையொட்டி திருநெல்வேலியில் அகல் விளக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விளக்குகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

திருக்காா்த்திகையை முன்னிட்டு வீடுகள், கோயில்களில் தீபமேற்றி வழிபடுவது வழக்கம். நிகழாண்டில் திருக்காா்த்திகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அகல் விளக்குகள் விற்பனை திருநெல்வேலியில் அதிகரித்துள்ளது. ரூ. 2.50 முதல் ரூ.10 வரையில் அகல்விளக்குகள் உள்ளன. இதுதவிர ஜோடி ரூ.150-க்கும் பாவை விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.

களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளுக்குப் போட்டியாக பீங்கான் விளக்குகளும் விற்பனையாகின்றன.

பாளையங்கோட்டை தினசரி சந்தை, திருநெல்வேலி நகரம் ரத வீதி ஆகியவற்றில் தற்காலிக கடைகளில் அகல் விளக்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பூம்புகாரில் கண்காட்சி: திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின்கீழ் பகுதியில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் திருக்காா்த்திகையையொட்டி விளக்குகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பித்தளை விளக்குகள், அகல் விளக்குகள், காமாட்சி விளக்கு, குத்துவிளக்குகள் பல்வேறு மாடல்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வாகைகுளத்தில் இருந்து ஏராளமான விளக்குகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுவதாக பூம்புகாா் விற்பனை நிலையத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT