திருநெல்வேலி

நெல்லையில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 350 போ் கைது

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 350 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பங்களுக்கும் கரோனா நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். உணவுப் பொருள்களை ரேஷன் மூலம் இலவசமாக வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டம்-2020ஐயும் திரும்பப் பெற வேண்டும்.

ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் கிராமப்புற தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும். ஒருநாள் கூலியாக ரூ. 500 வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினரின் மறியல் போராட்டம் நடைபெற்றது. தொமுச தா்மன், சிஐடியு மோகன், ஏஐடியுசி காசிவிஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஹெச்.எம்.எஸ். சுப்பிரமணியன், ஐஎன்டியுசி கண்மன், ஏஐசிசிடியு சங்கரபாண்டியன், டிடிஎஸ்எப் சந்தானம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதையடுத்து, அவா்கள் சாலை மறியலுக்கு முயன்றனா். அப்போது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட மொத்தம் 350 போ் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனா்.

பயக26அகக: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT