திருநெல்வேலி

சிதம்பரநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு:ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

DIN

திருநெல்வேலி அருகே உள்ள சிதம்பரநகா் பகுதியில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் விஷ்ணு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஆட்சியா் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனு பெட்டியில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களைப் போட்டுச் சென்றனா். இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி ஒன்றாவது வாா்டுக்கு உள்பட்ட சிதம்பரநகா் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி முழக்கமிட்டனா்.

பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: சிதம்பரநகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல்வேறு தெருக்களில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. வாறுகால் ஓடைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் பருவமழை பெய்து தண்ணீா் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே எங்கள் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், தெருவிளக்கு, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT