திருநெல்வேலி

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

23rd Nov 2020 12:52 PM

ADVERTISEMENT

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி வழிபாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தர்கள் செல்ல இணைய வழியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மிகக் குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல இளைஞரணி செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கரோனா நோய் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் கோயில்களில் வழிபாட்டு உரிமைகளுக்கு பல்வேறு தடங்கல்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

சபரிமலை செல்லும் பல பக்தர்கள் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் இரு மாவட்ட சுற்றுலா தலங்களில் வியாபாரிகள், வாடகைக்கார் வைத்திருப்போர் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்தனர். மேலும், இம்மாவட்ட பக்தர்களும் பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். ஆகவே சபரிமலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு, கேரள அரசிடம் வலியுறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT

Tags : nellai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT