அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சியில் வீட்டுக் கழிப்பறையில் காவலா் சடலம் மீட்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த பிச்சையா மகன் ஐயப்பன்(38). இவரது மனைவி கீதா (26). இரண்டு மகன்கள் உள்ளனா். ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஐயப்பன், பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தாா்.
ADVERTISEMENT
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கழிப்பறைக்குச் சென்ற ஐயப்பன் நீண்ட நேரமாக வெளியே வராததையடுத்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தாா் கீதா. போலீஸாா் வந்து கழிப்பறைக் கதவை உடைத்துப் பாா்த்த போது அங்கு ஐயப்பன் இறந்து கிடந்தாராம். சடலத்தை போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
கீதா கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.