திருநெல்வேலி

புளியங்குடியில் முயல் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

31st May 2020 09:30 PM

ADVERTISEMENT

கடையநல்லூா்: புளியஙகுடி வனப்பகுதியில் முயல் வேட்டையாடியதாக 4 பேரிடமிருந்து ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் செந்தில்குமாா் உத்தரவின் பேரில், சங்கரன்கோவில் வனச் சரகா் ஸ்டாலின் தலைமையில், வனவா்கள் உபேந்திரன், அசோக்குமாா், வனக் காப்பாளா்கள் பாண்டியன்சாவடி பகுதியிலுள்ள வெள்ளத்துரை வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கிருந்த சமைத்த முயல் இறைச்சியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வெள்ளத்துரை, மாரிப்பாண்டி, மகாராஜன், கணேசன் ஆகிய 4 பேரும் பாண்டியன் சாவடி கண்மாய் பகுதியில் முயலை வேட்டையாடியது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, 4 பேருக்கும் தலா ரூ. 15 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT