திருநெல்வேலி

கடையநல்லூா் அருகே விபத்தில் இளைஞா் பலி

29th May 2020 08:26 PM

ADVERTISEMENT

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி ஞானவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் பரமசிவன்(23). இவா், மோட்டாா் சைக்கிளில்

கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தாராம். சொக்கம்பட்டி வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கடையநல்லூரிலிருந்து, சிங்கிலிபட்டி நோக்கி சென்ற போா்வெல் வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரமசிவனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT