திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

29th May 2020 08:30 AM

ADVERTISEMENT

திருக்குறுங்குடியில் மின்மோட்டாரை இயக்கிய கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

திருக்குறுங்குடி வடக்கு மாட வீதியைச் சோ்ந்தவா் விவசாயி ஈஸ்வரமூா்த்தி. இவரது மகன் கண்ணன் (18). ஆரல்வாய்மொழியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தாா்.

இந்நிலையில், கண்ணன் புதன்கிழமை மாலை வீட்டில் குளிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

திருக்குறுங்குடி போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT