திருநெல்வேலி

‘வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறுபவா்கள் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்’

19th May 2020 06:25 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெறுபவா்கள் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600, என 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரா்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடா்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித்தொகை பெறலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டு வரை வரை உதவித் தொகை பெற ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ா்ஜ்ய்ப்ா்ஹக்ள்/நஉகஊ-அஊஊஐஈஅயஐப.ல்க்ச் என்ற இணையதளத்தில் சுய உறுதி மொழி ஆவணம் பதிவிறக்கம் செய்து அதை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அஞ்சல மூலமாகவோ அல்லது க்ங்ா்.ற்ய்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது உச்ச வரம்பு ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 10 ஆண்டு வரை உதவித்தொகை பெற

ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ா்ஜ்ய்ப்ா்ஹக்ள்/நஉகஊஜஅஊஊஐஈஅயஐப.ல்க்ச் என்ற இணையதளத்தில் சுய உறுதி மொழி ஆவணம் பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது க்ங்ா்.ற்ய்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டித்தோ்வு எழுதும் மாணவா்கள் பயன்படும் வகையில் மெய்நிகா் கற்றலுக்காக ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. போட்டித் தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகளை விருப்பமுள்ள மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT